நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே 8 லட்சம் முட்டைகளுடன் மீட்கப்பட்ட கல்நண்டு, பிரசவத்திற்காக அந்தமான் கொண்டு செல்லப்படுகிறது.
கோடியக்கரையில் மீனவர் வலையில் மூன்று கிலோ எடை கொண்ட ஒரு பெரிய கல் நண்டு கிடைத்தது. அந்த நண்டை சோதனை செய்து பார்த்ததில் குஞ்சுகள் பொரிப்பதற்காக 8 லட்சம் முட்டைகளுடன் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கல் நண்டு பிரசவத்திற்காக அந்தமானுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. நீர் நிரப்பி ஒரு பெட்டியில் வென்டிலேட்டர் பொருத்தி விமானம் மூலம் அந்தமான் குஞ்சு பொரிப்பகத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது