"நானே விஷ்ணு.." பரவிய ஒரே வீடியோ..கொதிக்கும் பக்தர்கள் - குபீர் கிளப்பிய இந்த திடீர் சாமியார் யார்?
"நானே விஷ்ணு.." பரவிய ஒரே ஒரு வீடியோ
பற்றிய தீ.. கொதிக்கும் பக்தர்கள்
குபீர் கிளப்பிய இந்த திடீர் சாமியார் யார்?
ஈரோட்டில் தான் கடவுள் எனக் கூறிக்கொண்டு கடவுள் சிலை மீது ஏறி அமர்ந்து அபிஷேகம் செய்து கொண்ட சாமியாரின் செயலை பலர் கிண்டலடித்து வரும் நிலையில், திடீரென முளைத்து திகில் தரும் சாமியார்களின் பின்னணியை விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு....
என்ன தான் ரோபோ, ஏஐ என வளர்ச்சி நோக்கி உலகம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தாலும்....ஊருக்குள் திடீர் சாமியார்கள் முளைப்பது மட்டும் இன்றளவும் மாறவில்லை...
அதிலும் அன்னப்பூரணி அரசு அம்மா செய்த அட்ராசிட்டியை யாரும் மறக்க முடியாது...
திருமணம் கடந்த உறவை முன்வைத்து நடந்த தனியார் நிகழ்ச்சி மூலம் பிரபலமான அன்னபூரணி, சாமியார்லாம் இல்ல நான்.. ஆனா நான் தான் சாமி.. என தன்னைத் தானே கடவுளாக அடையாளப்படுத்திக் கொண்டவர்..
ஆனால் அன்னபூரணி அம்மாவுக்கு டஃப் கொடுக்கும் வகையில் நானே மகாவிஷ்ணு, நானே பாண்டுரங்கன் என தெலங்கானாவில் ஏராளமான மக்களை ஏமாற்றி வந்தார் திருவண்ணாமலையை சேர்ந்த போலி சாமியார் சந்தோஷ் குமார்...
இரண்டு மனைவிகளை ஸ்ரீதேவி, பூதேவி என அடையாளப்படுத்திக் கொண்டு மகாவிஷ்ணு போல் போஸ் கொடுத்து இவர் செய்த அட்டகாசத்தை காமெடி கண்டென்டாக மாற்றினர் இணையவாசிகள்...
இந்நிலையில் இதென்ன பிரமாதம் என சொல்லும் அளவிற்கு ஈரோட்டில் குபீர் கிளப்பியுள்ளார் ஒரு திடீர் சாமியார்.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள நகலூர் பகுதியை சேர்ந்த கோசலராமன், தனக்கு சொந்தமான நிலத்தில் கலியுக ரங்கநாதர் என்ற பெயரில் கோவில் கட்டி பூஜை செய்து வருகிறார்.
இந்நிலையில் அமாவாசை தோறும் நடைபெறும் பூஜையில் தன்னைத் தானே கடவுள் எனக் கூறிக் கொண்டு பெருமாள் சிலையின் மீது ஏறி அமர்ந்ததோடு, அவருக்கு பாலாபிஷேகம் செய்கிறார் கோவில் பூசாரி...
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி கடும் விமர்சனங்களுக்கு ஆளானதோடு, எதிர்ப்புகளை சம்பாதித்து வருகிறது...
பொதுமக்களை ஏமாற்ற ஆன்மீக போர்வையை போர்த்தி கொள்ளும் இந்த போலி சாமியார்கள் காமெடி போர்வையில் சிக்கி வருவது வழக்கமாகி விட்டது...
கடவுள் எனக்கூறிக்கொண்டு காமெடி செய்து வரும் இந்த போலி சாமியார்களுக்கு... இல்லையா ஒரு எண்டு என்பதே மக்களின் புலம்பலாகவும் உள்ளது..