துப்பாக்கிச்சூடால் அதிர்ந்த ஈரோடு.. ஒரு சாதாரண நபர் கையில எப்படி வந்தது?
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டையில் கட்டிட தொழிலாளி செந்தில்குமார் என்பவரை துப்பாக்கியால் சுட்ட மற்றொரு கட்டிட தொழிலாளி கார்த்திக்கை போலீசார் கைது செய்தனர். கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாத கார்த்திக், குடித்துவிட்டு வந்து செந்தில்குமாரிடம் தகராறில் ஈடுபட்ட போது அவரை துப்பாக்கியால் சுட்டுள்ளார். காயம் அடைந்த செந்தில்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில், தலைமறைவான கார்த்திக்கை போலீசார் பிடித்தனர். அவர் மீது சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருப்பது, கொலை முயற்சியில் ஈடுபட்டது உள்ளிட்ட வழக்குகளை பதிவு செய்து, பவானி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.