தெருவில் நடக்க விடாமல் கொடூரமாக கடித்து குதறும் வெறிநாய்... மரண பீதியில் மக்கள்

Update: 2024-08-23 14:41 GMT

தென்காசி மாவட்டம் சுரண்டையில் வெறிநாய் கடியால் 15க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

தென்காசி மாவட்டத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் வெறி நாய்களின் தொந்தரவு வாடிக்கையாகி வருகிறது. இந்நிலையில், சுரண்டை நகராட்சி அருகே வெறிநாய் ஒன்று சாலையில் நடந்து சென்றவர்கள், வாகன ஓட்டிகள் என15க்கும் மேற்பட்டோரை கடித்து குதறியுள்ளது. இதில் 63 வயதுடைய அருணாச்சலம், 76 வயதுடைய பரிசில் பேகம் உள்ளிட்ட நான்குபேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்களுக்கு சுரண்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் தென்காசி அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சையும் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்