அடேங்கப்பா.. 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் தயாரிக்கப்பட்ட பிரம்மாண்ட மாலை
நிலக்கோட்டை பூ சந்தையிலிருந்து நாகர்கோவிலுக்கு 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் பிரம்மாண்டமான மாலை தயாரிக்கப்பட்டது
தமிழகத்தில் உள்ள பல்வேறு மலர் சந்தைகளில் நிலக்கோட்டை பூ மார்க்கெட் உலக அளவில் பிரசித்தி பெற்றது. இங்கு வசிக்கும் பெரும்பாலான விவசாயிகள் பூக்களை சாகுபடி செய்து, உலக நாடுகளுக்கு அனுப்பி வருகின்றனர்.
அந்த வகையில் நாகர்கோவிலில் நடைபெற்று வரும் கோவில் திருவிழாவிற்கு, நிலக்கோட்டையில் இருந்து ஏலக்காய், கருப்பு திராட்சை, முந்திரிப்பருப்பு, பாதாம் பருப்பு ஆகிய உலர் பொருட்களைக் கொண்டு 4 லட்சம் மதிப்பில் உலர் பழங்களில் பிரம்மாண்டமான மாலை தயாரித்து அனுப்பி வைத்தனர்.