திண்டுக்கல் மாவட்டம் கூம்பூர் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் 13 மாணவ மாணவிகள் பயின்று வரும் நிலையில் இந்திரா என்பவர் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் தலைமை ஆசிரியரின் செயல்பாடுகள் பிடிக்காததால் அவரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்று பெற்றோர் வட்டார கல்வி அதிகாரியிடம் புகார் மனு அளித்திருந்தும் இந்திரா பணிக்கு வந்ததையடுத்து தலைமை ஆசிரியர் இந்திராவை வேறு இடத்திற்கு மாற்றாவிடில் தங்களது குழந்தைகளின் மாற்றுச் சான்றிதழ்களை வாங்கி வெளியேறுவோம் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வீட்டிற்கு அழைத்து சென்றனர். சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கூம்பூர் போலீசார் கல்வித்துறை அதிகாரிகளிடம் சென்று முறையுடுமாறு அறிவுறுத்தியதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.