இரவோடு இரவாக... ஆட்டோக்களை சுற்றி கம்பி வேலி போட்ட நகராட்சி... ``எங்க பொழப்பே போச்சு..'' - குமுறும் ஆட்டோ ஓட்டுனர்கள்

Update: 2024-10-29 12:06 GMT

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு, கடந்த வாரம் தமிழக அமைச்சர் கே என் நேரு அவர்களால் திறந்துவைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்ல துவங்கின. இந்நிலையில் பேருந்து நிலையத்தின் அருகாமையில் இருந்த காலி இடத்தில், ஆட்டோக்களை நிறுத்தி இயக்கி வந்தனர். ஆனால் அந்த இடம் நகராட்சி சொந்தமான இடம் என்பதால், நிர்வாகம் ஆட்டோ நிறுத்த மறுப்பு தெரிவித்தது. இதனை தொடர்ந்து, கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவோடு இரவாக, ஆட்டோக்கள் உள்ளே இருக்கும் நிலையிலேயே, அதனை சுற்றி நகராட்சி சார்பில் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் ஆட்டோக்களை வெளியே எடுக்க முடியாமலும், இயக்க முடியாமலும், கடந்த 4 நாட்களாக ஆட்டோ ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். ஆட்டோக்களை நிறுத்த தங்களுக்கு தனி இடம் ஒதுக்கி தர வேண்டும் என ஆட்டோ ஓட்டுநர்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்