முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில், விழுப்புரம் நீதிமன்றத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆஜரானார். விழுப்புரத்தில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாக சி.வி.சண்முகம் மீது வழக்குகள் தொடரப்பட்டன. விழுப்புரம் நீதித்துறை நடுவர் முதலாவது நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் ஆஜரானார். அப்போது, வரும் 23-ம் தேதி நடைபெறும் விசாரணையில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். மேலும் குற்றங்கள் குறித்த ஆவணங்கள், சி.வி.சண்முகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. மற்றொரு வழக்கு விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. சி.வி.சண்முகம் ஆஜரான நிலையில், விசாரணை 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.