கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள்.. தமிழக அரசு விளக்கம் | Napkins | TN Govt

Update: 2024-09-13 02:25 GMT

கல்லூரிகளில் நாப்கின் வழங்கும் இயந்திரங்கள், தற்போது முழுமையாக செயல்படுவதாக தமிழக கல்லூரி கல்வி இயக்குனர் சென்னை உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணவிகளுக்கு சானட்டரி நாப்கின் வழங்கும் தானியங்கி இயந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளதாக, தினத்தந்தி நாளிதழில் செய்தி வெளியானது. இந்த செய்தி அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்கில், கல்லூரி கல்வி இயக்கக இயக்குனர் பதில் அறிக்கை தாக்கல் செய்திருந்துள்ளார். 2017 மற்றும் 2018ம் ஆண்டு நாப்கின் வழங்கும் இயந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு, 89 கல்லூரிகளில் பொருத்தப்பட்டுள்ளதாகவும், அவை பழுதடைந்தால், சரி செய்யவும் வகை செய்யப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. அனைத்து கல்லூரிகளிலும் தற்போது நடைமுறையில் உள்ள நிலையில், அனைத்து அரசு கல்லூரிகளிலும் சுகாதாரமான சூழலை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, பள்ளிகளின் நிலவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்

Tags:    

மேலும் செய்திகள்