கோவை கமிஷனர் போட்ட அதிரடி உத்தரவு

Update: 2023-09-27 13:44 GMT

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில், பணி முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த பெண்ணை, மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்துள்ளனர். திடீரென வழிமறித்த அவர்கள், கத்தியைக் காட்டி மிரட்டி பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த 12 சவரன் தங்க நகைகளை திருடிக் கொண்டு தப்பியோடினர். இதேபோல, ராம் நகர் பகுதியில், ஹோட்டலில் இருந்து வெளியே வந்த இளைஞரை வழிமறித்த மர்ம நபர்கள் செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதனை தடுக்க முயன்ற இளைஞரை கத்தியை கொண்டு தோள்பட்டையில் குத்தியுள்ளனர். அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவங்களை தொடர்ந்து, கோவை மாநகர காவல் ஆணையரின் உத்தரவின்பேரில், வழிப்பறி கொள்ளையர்களை பிடிக்க நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்