- கனமழை காரணமாக சென்னையின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் புழல், சோழவரம் உள்ளிட்ட ஏரிகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது.
- புழல் ஏரியில் நீர் இருப்பு இன்று 232 கோடி கன அடியாக, மொத்த கொள்ளளவில் 70.48 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று இது 61.97 சதவீதமாக இருந்தது.
- செம்பரம்பாக்கம் ஏரியில் நீர் இருப்பு இன்று 128 கோடி கன அடியாக, மொத்த கொள்ளளவில் 35.28 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று இது 33.55 சதவீதமாக இருந்தது.
- பூண்டி ஏரியில் நீர் இருப்பு இன்று 38.4 கோடி கன அடியாக, மொத்த கொள்ளளவில் 11.88 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று இது 10.12 சதவீதமாக இருந்தது.
- சோழவரம் ஏரியில் நீர் இருப்பு இன்று 16.2 கோடி கன அடியாக, மொத்த கொள்ளளவில் 14.99 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று இது 6.85 சதவீதமாக இருந்தது ஒப்பிடத்தக்கது.
- கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியில் நீர் இருப்பு இன்று 30.5 கோடி கன அடியாக, மொத்த கொள்ளளவில் 61 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று இது 60.40 சதவீதமாக இருந்தது.
- வீராணம் ஏரியில் நீர் இருப்பு இன்று 103.9 கோடி கன அடியாக, மொத்த கொள்ளளவில் 70.93 சதவீதமாக உயர்ந்துள்ளது. நேற்று இது 69.27 சதவீதமாக இருந்தது.