அண்ணா யுனிவர்சிட்டி கேம்பஸில் மாணவி பாலியல் வன்கொடுமை? - அண்ணாமலை போட்ட பரபரப்பு ட்வீட்

Update: 2024-12-25 07:59 GMT

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்திற்குள், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது அதிர்ச்சி அளிப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மாநிலத் தலைநகரத்தின் மையப்பகுதியில், பொறியியல் கல்வி தலைமை நிறுவன வளாகத்தின் உள்ளே, பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலை இருக்கிறது என்றால், சமூக விரோதிகளுக்கு, அரசின் மீதோ, காவல்துறையின் மீதோ எந்த பயமும் இல்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது என அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். மேலும், உடனடியாக, இந்தக் குற்றத்தில் தொடர்புடைய அனைவர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மாநகர காவல்துறையும், காவல்துறைக்குப் பொறுப்பான முதலமைச்சரும், மாணவி மீதான பாலியல் தாக்குதலுக்கு முழு பொறுப்பேற்று, பொதுமக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்