சென்னைக்கு வரும் அதிரடி திட்டங்கள்.. அறிவித்த நிதின் கட்காரி

Update: 2024-07-25 02:54 GMT

சென்னை - பெங்களூரு விரைவு சாலை பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முடிவடையும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

7 ஆயிரதது 525 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் சென்னை - பெங்களூரு விரைவு சாலை பணிகள்

61.74 சதவீதம் முடிவடைந்துள்ளதாகவும் இப்பணிகள் வரும் மார்ச் மாதத்திற்குள் முழுமையாக முடிக்கப்பட்டு விடும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

இந்த திட்டம் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் போது, சென்னை - பெங்களூரு இடையேயான பயண நேரம் வெகுவாக குறையும் எனவும் அவர் தெரிவித்தார்.

அதேபோல் சென்னை துறைமுகம் - மதுரவாயல் இடையிலான ஈரடுக்கு நான்குவழி உயர்மட்ட சாலை திட்ட பணிகள் 2026-ம் ஆண்டு மே மாதத்திற்குள் முடிக்கப்படும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இது தவிர, சென்னை - திருப்பதி, மாமல்லபுரம் - முகையூர், தர்மபுரி - தொரப்பள்ளி, விக்கிரவாண்டி - சேத்தியாதோப்பு, ஒட்டன்சத்திரம் - பழனி, திருமங்கலம் - வடுகப்பட்டி உள்ளிட்ட பல்வேறு தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணிகள் அடுத்த ஆண்டிற்குள் முடிக்கப்படும் எனவும் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்