"Phone அடி.. Phone அடி.. நீ" - இரவில் கட்டான கரண்ட்.. மின்வாரிய அலுவலகத்தில் பரபரப்பு
சென்னை ஆவடியில் தொடர் மின்வெட்டை கண்டித்து, மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். ஆவடி தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் நேற்றிரவு மின்வெட்டு ஏற்பட்டதால் கோபமடைந்த பொதுமக்கள், மின்சார வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டு, மின்வாரிய ஊழியர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொலைபேசியில் தொடர்பு கொண்டால் யாரும் அழைப்பை எடுப்பதில்லை என்றும், மின்வெட்டுக்கான காரணத்தை யாரும் தெரிவிப்பதில்லை என்றும் அவர்கள் குற்றம்சாட்டினர். மின்வெட்டு பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..