சென்னை மெரினாவில் க்ரீன் சிக்னல் கொடுத்த சென்னை மாநகராட்சி... உடனே மக்கள் சொன்ன விஷயம்

Update: 2024-10-25 07:07 GMT

சென்னை மெரினாவில் க்ரீன் சிக்னல் கொடுத்த சென்னை மாநகராட்சி... உடனே மக்கள் சொன்ன விஷயம்

நொச்சிகுப்பத்தில் மீன் விற்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஓரிரு நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவுள்ளதாக மீனவர் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். சென்னை நொச்சிகுப்பம் நவீன மீன் மார்க்கெட் விவகாரத்தால், கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் மீனவர் அமைப்பினர் போராட்டம் நடத்தி வந்தனர். இந்த விவகாரம் தொடர்பாக அப்பகுதி மீனவர்கள், சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரனை சந்தித்து ஆலோசனை நடத்தினர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர்கள், நொச்சிக்குப்பம் லூப் சாலையில் தினசரி மீன் விற்க கோரிக்கை விடுத்த நிலையில், அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும் வேகத்தடை அமைக்கவும், தெருவிளக்கு வெளிச்சம் தரையில் படும்படி மாற்றியமைக்கவும் கோரிக்கை விடுத்ததாக தெரிவித்தனர். தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்த நிலையில், ஓரிரு நாட்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவுள்ளதாகவும் மீனவர் அமைப்பினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்