ஆயிரம்விளக்கு பகுதியில் சிறுமியை ராட்வீலர் நாய்கள் கடித்து குதறிய சம்பவத்தை தொடர்ந்து, செல்லப் பிராணிகளை வளர்ப்பதற்கு உரிமம் பெறுவது கட்டாயம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இதைதொடர்ந்து, இணைய வழியில் செல்லப்பிராணிகள் உரிமம் பெறும் வழிமுறைகள் வெளியிடப்பட்டிருந்தது. கடந்த 3 நாட்களில் 2 ஆயிரத்து 300 பேர் விண்ணப்பித்திருப்பதாக சென்னை மாநகராட்சி கால்நடைத்துறை தெரிவித்துள்ளது. அதில், இதுவரை 930 பேருக்கு உரிமம் தரப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள விண்ணப்பங்கள் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.