நீதிபதி போட்ட உத்தரவு -சிபிஐ சோதனையில் சிக்கிய இன்ஸ்பெக்டர்-சென்னையில் பரபரப்பு

Update: 2024-09-08 13:35 GMT

சென்னை, நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தின், சட்ட ஒழுங்கு காவல் ஆய்வாளராக இருந்த ஆனந்த்பாபு காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

முன்னதாக நீலாங்கரை காவல் நிலையத்தில் ஆனந்த்பாபு ஆய்வாளராக பணிபுரிந்து வந்தது குறிப்பிடத்தக்கது. இவர், சென்னை சோழிங்கநல்லூரை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கு சொந்தமான நிலத்தை அபகரித்துக் கொண்டவர்களுக்கு சாதகமாக செயல்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டது. இது குறித்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் கார்த்திக் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்ட நீதிபதி, 4 மாதங்களில் சிறப்பு குழு ஒன்றை அமைத்து காவல்துறை மீது உள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவ உத்தரவிட்டார். இதனடிப்படையில், ஆனந்த்பாபுக்கு தொடர்புடைய நான்கு இடங்களில் இந்த வழக்கு தொடர்பாக சிபிஐ போலீசார் சோதனை நடத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், காவல் ஆய்வாளர் ஆனந்த் பாபுவை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்