சண்டிகர் பல்கலை. மற்றும் PwC நிறுவனம் இடையே ஒப்பந்தம் | Chandigarh University

Update: 2024-08-13 02:30 GMT

பி.டபிள்யூ.சி (PWC) நிதி ஆலோசனை நிறுவனம் மற்றும் சண்டிகர் பல்கலைக் கழகம் இடையே எம்.பி.ஏ பட்டமேற்படிப்பு தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. APPLIED FINANCE எம்.பி.ஏ பட்டமேற்படிப்பை, பி.டபிள்யூ.சி (PWC) நிதி ஆலோசனை நிறுவனத்துடன் இணைந்து வழிநடத்துவது தொடர்பாக இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சண்டிகர் பல்கலைக் கழக பதிவாளர் டாக்டர் ஜி.எஸ்.பிரார் (GS BRAR) மற்றும் பி.டபிள்யூ.சி (PWC) நிதி ஆலோசனை நிறுவனத்தின் மூத்த இயக்குனர் சஞ்சீவ் பார்க்கர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நிலையில், பி.டபிள்யூ.சி (PWC) நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் முதல் பல்கலைக் கழகம் என்ற பெருமையை சண்டிகர் பல்கலைக் கழகம் பெற்றுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்