இந்தியாவை உலுக்கிய அரசியல் ஆளுமை கொலை - பின்னணியில் இவரா..? பகீர் தகவல்

Update: 2024-10-23 14:12 GMT

தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பாபா சித்திக் கடந்து வாரத்தில் மும்பையில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இவரது கொலைக்குப் பிரபல தாதாவான லாரான்ஸ் பீஷ்னோய் குழு பொறுப்பேற்றது. இதில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவர் உட்பட 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் வெளிநாடுகளில் தலைமறைவாக இருந்து வரும் லாரன்ஸ் பீஷ்னோயின் சகோதரர் அன்மோல் பீஷ்நோயை கொலையாளிகள் ஸ்னாப் சாட் என்ற செயலி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசி இருப்பதும் தெரிய வந்துள்ளது. அதன் பின்பாக அவருடன் பேசிய விவரங்களைக் கொலையாளிகள் அழித்திருப்பதும் தெரியவந்துள்ளது.அன்மோல் பீஷ்நோய் கனடா மற்றும் அமெரிக்கா நாடுகளில் தலைமறைவாக வாழ்ந்து வருகிறார்.அன்மோல் பீஷ்நோய் மீது பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்தியப் புலன் விசாரணை அமைப்புக்களால்

தேடப்படும் குற்றவாளியாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

Tags:    

மேலும் செய்திகள்