திருச்செந்தூர் கடலில் மாற்றம்.. குளித்தால் உடம்பில் வரும் காயம் - பீதியில் பக்தர்கள்
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடற்கரையில் கடந்த சில நாட்களாக முள்ளெலிகள் கரை ஒதுங்கி வருகிறது. இந்த கடல் முள்ளெலிகளில் இருக்கும் சிறிய, கூர்மையான முட்கள் கடலில் புனித நீராடும் பக்தர்கள் மீது குத்துவதால் பக்தர்களுக்கு காயம் ஏற்படும் அபாயம் உள்ள நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கோவில் நிர்வாகம் சார்பில் கடற்கரையில் ஒதுங்கும் முள்ளெலிகளை கடற்கரை பாதுகாப்பு பணியாளர்கள் அப்புறப்படுத்தி வருகின்றனர்.