"சொந்த நாட்டிலே அகதியாக.."..நெஞ்சை உலுக்கும் பெண்ணின் அழுகை - செய்வதறியாது தவிக்கும் மக்கள்
#Srilanka | #ramanathapuram
"சொந்த நாட்டிலே அகதியாக.."..நெஞ்சை உலுக்கும் பெண்ணின் அழுகை - செய்வதறியாது தவிக்கும் ராமநாதபுரம் மக்கள்
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 17 மீனவர்களையும் 2 விசைப் படகுகளையும் மீட்டுத் தர வேண்டும் என கண்ணீர் மல்க உறவினர்கள் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். மனு அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த, ராமேஸ்வரத்தை சேர்ந்த 2 மீனவர்களின் தாயார் அருள்மேரி, 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான தன்னுடைய படகையும், தன்னுடைய இரு மகன்களையும் இலங்கை கடற்படை பிடித்து சென்று இருப்பதாக கண்ணீர் மல்க தெரிவித்தது சோகத்தை ஏற்படுத்துவதாக இருந்தது.