சம்போ செந்திலின் `ஆர்குட்’ காதலி என்ட்ரி ... ஆம்ஸ்ட்ராங் கேஸ் `ஸ்பைடர் லைன்’யில் முக்கிய பிரபலங்கள்

Update: 2024-08-25 06:32 GMT

தமிழக போலீசாரால் பல ஆண்டு காலம் தேடப்பட்டு வந்த சம்போ செந்தில் தொடர்பான வழக்கில் ஏற்பட்ட திருப்பங்கள் குறித்தும் திரைத்துறையின் முக்கிய பிரபலங்கள் ஆம்ஸ்ட்ராங் வழக்கு விசாரணை வளையத்திற்குள் சிக்கியுள்ளது குறித்தும் விவரிக்கிறது இந்த தொகுப்பு....

சென்னை போலீசாருக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழக போலீசாருக்கும் தமிழக தாவூத் இப்ராகிம் போன்று இருப்பவர் தான் பிரபல தாதா சம்போ செந்தில்...

சட்டப்படிப்பை முடித்த செந்திலின் வழித்தடம் மாற தொடங்கியது.. அதன் பின் கொலை கொள்ளை என பல சம்பவங்களை அரங்கேற்றி பிரபல தாதாவானார்..

தமிழக காவல்துறை எத்தனையோ ரவுடிகளை பார்த்திருந்தாலும் சம்போ செந்தில் போல ஒரு ரவுடியை பார்த்ததில்லை என்கின்றனர். அவரை இதுவரை பிடிக்கவில்லை என்பதில் இருந்தே அவர் எவ்வளவு உஷாராக

இருக்கிறார் என்பதும் தெரிய வரும் என்கின்றனர் போலீசார்.

பல கட்ட விசாரணைக்கு பின்னர் வெளிநாட்டில் உள்ள சம்போ செந்திலின் முன்னாள் மனைவியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். அதில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் வாட்ஸ் அப் போன்று பிரபலமாக இருந்த ஆர்குட் செயலி மூலம் பேசி பழகி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். பின்னர் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்ததும் தெரியவந்துள்ளது.

இதில் சம்போ செந்திலின் சமீபத்திய புகைப்படத்தை அவரது முன்னாள் மனைவியிடம் இருந்து பெற்று இருப்பது முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது.

இதே நேரத்தில், சம்போ செந்திலின் கூட்டாளிகள் பலரும் கைது செய்யப்பட்ட நிலையில், அவரது நெருக்கமான கூட்டாளியாக அறியப்படும் மொட்டை கிருஷ்ணனை தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர் தலைமறைவானார்.

இதனை தொடர்ந்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணையை நடத்திய போலீசார், பிரபல திரைப்பட இயக்குநர் நெல்சனின் மனைவி மோனிஷாவிடம் விசாரணையை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. கல்லூரி நண்பரான மொட்டை கிருஷ்ணனுடன் நீண்ட காலம் பேசி வந்ததாகவும் மோனிஷா போலீசாரிடம் தெரிவித்து இருந்தார்.

இதனைத் தொடர்ந்து நெல்சனுக்கு சம்மன் அனுப்பிய போலீசார் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அவரிடம் விசாரணை நடத்தினர். அதில் மோனிஷா, மொட்டை கிருஷ்ணன் ஆகியோரை பற்றி பல கேள்விகள் கேட்டு பதிலை போலீசார் பதிவு செய்து இருக்கின்றனர்.

இந்த நிலையில் போலீசார் தனக்கு சம்மனும் அளிக்கவில்லை, தன்னிடம் விசாரணை நடத்தவும் இல்லை என நெல்சன் தெரிவித்து இருக்கிறார். தன் வாழ்நாளில் போலீசாரிடம் இருந்து தொலைபேசி அழைப்போ அல்லது நேரில் வரக்கோரியோ அழைப்போ வந்ததே இல்லை எனவும் கூறி இருக்கிறார்.

சிலந்தி வலை போல பலரையும் விசாரணை வளையத்திற்கு கொண்டு வரும் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் அடுத்தடுத்து வரப்போகின்ற திருப்பங்கள் கணிக்க முடியாதவையாக இருக்கின்றன.

Tags:    

மேலும் செய்திகள்