தகுதியான 140 ஆசிரியர்கள் நியமனம் செய்தது மன நிறைவை தருவதாக அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் வேல்ராஜ் தெரிவித்துள்ளார். துணைவேந்தர் பதவியில் இருந்து ஓய்வு பெறும் வேல்ராஜ், பணிக்கால ஓய்வு பெறுவதற்கு ஓராண்டு காலம் இருப்பதால், மீண்டும் எரிசக்தி துறைக்கு பேராசிரியராக பணிக்கு செல்ல இருக்கிறார். இந்நிலையில், மீண்டும் துணைவேந்தர் பதவிக்கு போட்டியா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அந்த நேரத்தில் முடிவு செய்வேன் என்று தெரிவித்தார்.