ரூ.500 கோடியில் மர்ம பங்களா.. வியந்து பார்த்த சந்திரபாபு நாயுடு

Update: 2024-11-03 01:59 GMT

ரூ.500 கோடியில் மர்ம பங்களா.. வியந்து பார்த்த சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் ஜெகன் மோகன் ஆட்சியில் கட்டப்பட்ட மர்ம பங்களாவை அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு பார்வையிட்டார்.

ஜெகன் மோகன் ஆட்சியில் விசாகப்பட்டினம் கடற்கரையில் ருசிகொண்டா மலையில் 500 கோடி ரூபாய் செலவில் அதிநவீன வசதிகள் கொண்ட சொகுசு பங்களா கட்டப்பட்டது. பங்களாவை பார்வையிட எதிர்க்கட்சிகள் முயற்சி செய்தும் பயனளிக்கவில்லை. 24 மணிநேர ஆந்திர சிறப்பு படை போலீஸ் கண்காணிப்பு, யாரும் நுழையாத வகையில் சிசிடிவி கேமரா கண்காணிப்பு, ட்ரோன் கண்காணிப்பு என அதிஉயர் பாதுகாப்பில் பங்களா இருந்தது. மாநிலத்தில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சிக்கு வந்த பிறகு முதல்முறையாக முதல்வர் சந்திரபாபு நாடு பங்களாவை பார்வையிட்டார். அங்கு செய்யப்பட்டிருந்த வசதிகளை கண்டு வியந்தவர், அதிகாரிகளிடம் தகவல்களை கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், பலமுறை முயன்றும் எட்டிக்கூட பார்க்க முடியாத பங்களாவை பார்ப்பதற்கு மக்கள் வாக்களித்து அனுப்பியிருக்கிறார்கள், பங்களாவை அடுத்து என்ன செய்யலாம் என்பது குறித்து ஆலோசிக்கும் வாய்ப்பையும் மக்களாட்சி கொடுத்துள்ளது எனவும் தெரிவித்தார்.  

Tags:    

மேலும் செய்திகள்