உறவினர்கள், நண்பர்கள் போனில் அழுதால் எச்சரிக்கை..! ஆட்டிப்படைக்கும் `AI'... போலீஸ் வார்னிங்

Update: 2024-04-27 12:47 GMT

ஏ.ஐ தொழில்நுட்பம் மூலம்... குரல் குளோனிங்கை பயன்படுத்தி நூதன முறையில் மோசடி நடைபெறுவதாக தமிழக சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சைபர் கிரைம் மோசடி செய்யும் கும்பல், தற்போது அதிநவீன தொழில் நுட்பமான குரல் குளோனிங்கை பயன்படுத்தி மோசடி செய்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர். செல்போன் மூலம் அழைப்பு விடுத்து வலைவிரிக்கும் கும்பல், சம்பந்தப்பட்ட நபர்களின் குடும்ப உறுப்பினர்களின் குரலில் ஆள் மாறாட்டம் செய்து மோசடி செய்வதாக கூறப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களின் குரலில் தந்திரமாக பேசும் கும்பல், மருத்துவ தேவை மற்றும் அவசர உதவி எனக்கூறி பணம் பறிப்பதாக சொல்லப்படுகிறது. ஆடியோ மூலம் அரங்கேற்றப்படும் இதே மோசடியை வீடியோ மூலமும் தமக்கு தெரிந்தவர்களின் முகத்தை சித்தரித்து அனுப்பியும் கும்பல் மோசடி செய்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில், முன்பின் தெரியாத நம்பர்களில் இருந்து வரும் செல்போன் அழைப்புகளையும், செய்திகளையும் பெரும்போது எச்சரிக்கையாக இருக்கும்படியும், இதுபோன்ற மோசடியில் சிக்கினால் உடனடியாக புகாரளிக்கும்படியும் சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்