ஓடும் ரயிலில் ஏற முயன்று பிளாட்பார்முக்கும் ரயிலுக்கும் நடுவே சிக்கிய இளம்பெண் -சென்னையில் அதிர்ச்சி
சென்னையில் இருந்து கேரளா புறப்பட்ட ரயிலில் தவறி விழுந்த இளம்பெண்ணை ரயில்வே போலீசார் பத்திரமாக மீட்டனர். செங்கல்பட்டில் செயல்படும் தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் காருண்யா என்பவர், தனது நண்பர்களுடன் கேரளாவுக்கு ரயிலில் பயணம் செய்ய சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு வந்தார். ரயில் புறப்பட தயாராக இருந்த நிலையில், அதில் ஏற முற்பட்ட போது திடீரென தவறி நடைமேடையில் விழுந்தார். இதையடுத்து காருண்யாவை, ரயில்வே காவலர் மற்றும் பயணிகள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு நிலவியது. சம்பவம் குறித்த சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.