ஏரியை ஆக்கிரமித்த 390 பேர்.. ஐகோர்ட் போட்ட அதிரடி உத்தரவு - மாவட்ட எஸ்.பி.யிடம் கதறும் பெண்கள்
விழுப்புரம் வி.மருதூர் ஏரியின் பெரும் பகுதியை 390 பேர் ஆக்கிரமித்து வீடுகள் மற்றும் கடைகளைக் கட்டி, 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனர். இதையடுத்து, உயர்நீதிமன்ற உத்தரவுப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுப்பணித் துறை சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் ஆக்கிரமிப்பு இடங்களில் வசிப்பவர்கள் காலி செய்யவில்லை. இந்நிலையில், வருவாய் மற்றும் காவல் துறையினர், அந்தப் பகுதியில் ஆய்வுக்காக சென்றனர். அப்போது, அங்கு வசித்து வரும் பெண்கள், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ச்சாங் சாயிடம், தங்கள் குடியிருப்புகளை இடிக்க வேண்டாம் என்று கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தனர். ஆனால், ஆக்கிரமிப்பு குடியிருப்புகளை அகற்றுதவற்கு முன் மாற்று ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்று அவர்களை மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் சமாதானப்படுத்தி விட்டுச் சென்றார்.