கன்னியாகுமரியில் இடி, மின்னலுடன் கனமழை - பொதுமக்கள் மகிழ்ச்சி

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தோவாளை, இரணியல் உள்ளிட்ட பரவலாக அனைத்து பகுதிகளிலும் காலை முதல் மதியம் வரை சுட்டெரிக்கும் வெயில் காணப்பட்டது.

Update: 2022-04-04 10:10 GMT
கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவில், தோவாளை, இரணியல் உள்ளிட்ட பரவலாக அனைத்து பகுதிகளிலும் காலை முதல் மதியம் வரை சுட்டெரிக்கும் வெயில்  காணப்பட்டது.  பின்னர் மதியம் திடீரென கார்மேகம் மூண்டதோடு சிறிது நேரத்தில் இடி மின்னலுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.  ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்து பெய்த மழை காரணமாக ஏற்கனவே காணப்பட்ட வெப்பமான காலநிலை மாறி குளிர்ச்சியான  காலநிலை உருவானது. இதனால் கடந்த சில நாட்களாக வெப்பத்தால் பரிதவித்து வந்த பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வானிலை ஆய்வு மையம் அறிவித்தபடி வரும் ஓரிரு நாட்களுக்கு மழை பெய்தால் குமரி குளிர்ச்சியடையும் என்ற நம்பிக்கையோடு பொதுமக்கள் தொடர்ந்து மழையை எதிர்பார்த்த வண்ணம் உள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்