டி.ராஜேந்தர் பயணித்த கார் மோதி முதியவர் பலி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு!

நடிகர் டி.ராஜேந்தர் பயணித்த கார் மோதி விபத்துக்குள்ளான முதியவர் உயிரிழந்த நிலையில் அதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

Update: 2022-03-24 07:34 GMT
நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் தன் மகள் வழி பேத்தியை அழைத்துக் கொண்டு காரில் சென்றார். அப்போது இளங்கோ சாலை அருகே சென்ற போது சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயமடைந்த முதியவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார் டி.ராஜேந்தர். விபத்தை ஏற்படுத்திய கார் நடிகர் சிலம்பரசனுக்கு சொந்தமானது என்றும், காரை செல்வம் என்பவர் ஓட்டியதும் தெரியவந்தது. உயிரிழந்த முனுசாமிக்கு காலில் அடிபட்டிருந்ததால் சாலையில் ஊர்ந்து சென்ற போது இந்த விபத்து நடந்ததும் தெரியவந்த நிலையில் விபத்தின் வழக்கு பிரிவும் மாற்றப்பட்டது. இதனிடையே விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்