நடிகர் சங்க தேர்தல் - இன்று வாக்கு எண்ணிக்கை

2 ஆண்டுகளுக்கு முன்பாக நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

Update: 2022-03-20 03:19 GMT
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகின்றன. நீதிமன்றத்தில் வழக்கு இருந்ததால் 2 ஆண்டுகளாக எண்ணப்படாமல் இருந்தன. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள குட்ஷெப்பர் பள்ளியில் வாக்குகள் எண்ணும் பணி நடைபெறவிருக்கிறது. தென்னிந்திய நடிகர் சங்கத்தில் 3 ஆயிரத்து 173 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர்.  3 ஆயிரத்து 173 பேரில், ஆயிரத்து 604 பேர் மட்டும் வாக்களித்தனர். கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி வெற்றி பெற்றது. விஷால் அணியின் பதவிக்காலம் 2018-ஆம் ஆண்டு அக்டோபருடன் நிறைவடைந்தது. செயற்குழு ஒப்புதலுடன் விஷால் அணியின் பதவிக்காலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது.

2019-ஆம் ஆண்டு ஜூன் 23-ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டது. விஷால் தலைமையில் பாண்டவர் அணி, ஐசரி கணேஷ் தலைமையில் சுவாமி சங்கரதாஸ் அணி போட்டியிட்டன. பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷால் பொருளாளர் பதவிக்கு நடிகர் கார்த்தி,துணைத் தலைவர்கள் பதவிக்கு பூச்சி முருகன், நடிகர் கருணாஸ் போட்டியிட்டனர். சுவாமி சங்கரதாஸ் அணியில் தலைவர் பதவிக்கு கே.பாக்யராஜ், பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ், பொருளாளர் பதவிக்கு நடிகர் பிரசாந்த், துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு குட்டி பத்மினி, உதயா போட்டியினர். 

சங்க உறுப்பினர்கள் பலர் நீக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டதாக புகார் எழுந்தது. நடிகர் ஏழுமலை, பெஞ்சமின் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் என்ற புகாரால் நடிகர் சங்க தேர்தலை பதிவாளர் நிறுத்தி வைத்தார். பதிவாளரின் உத்தரவை எதிர்த்து நடிகர் விஷால் வழக்கு தொடர்ந்திருந்தார் தேர்தலை நடத்த அனுமதி அளித்த நீதிமன்றம், வாக்கு எண்ணிக்கையை நடத்தக் கூடாது என உத்தரவிட்டது.  நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் திட்டமிட்டப்படி 2019 ஜூன் 23ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவின்படி, வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைத்து பூட்டப்பட்டிருந்தன. நடிகர் சங்கத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிக்க பிப்ரவரி 23 ஆம் தேதி தீர்ப்பு வெளியானது. தீர்ப்பு அடிப்படையில் நுங்கம்பாக்கத்தில் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணி அளவில் தொடங்கியது.


Tags:    

மேலும் செய்திகள்