இன்று வெளியாகிறது தீர்ப்பு - நடிகர் சங்க தேர்தல் வழக்கு | Chennai

இன்று வெளியாகிறது தீர்ப்பு - நடிகர் சங்க தேர்தல் வழக்கு

Update: 2022-02-23 03:25 GMT
2015 ம் ஆண்டு நடந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் விஷால் தலைமையிலான அணி வெற்றி பெற்ற நிலையில், அவர்களின் பதவி காலம் 2018 ஆம் ஆண்டு அக்டோபருடன் முடிவடைந்தது. பின்னர் செயற்குழு ஒப்புதலுடன் பதவிகாலம் 6 மாதம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் 2019 ஆம் ஆண்டு ஜூன் 23ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் முறையான வாக்காளர் பட்டியலை தயாரித்து நியாயமாக தேர்தல் நடத்தை குழு ஒன்றை அமைக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் ஜூன் 23 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின்படி, வாக்கு எண்ணிக்கை நடத்தப்படாமல், வாக்குப்பெட்டிகள் வங்கி லாக்கரில் வைக்கப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய கோரி நடிகர் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் வழக்கு தொடர்ந்தனர். அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த தனி அதிகாரி தொடர்ந்து கவனிக்கவும் உத்தரவிட்டார். இதனை எதிர்த்து  விஷால், நாசர், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்குகள் முடிவடைந்துள்ள நிலையில், இன்று காலை 10:30 மணிக்கு நீதிபதிகள் தீர்ப்பளிக்க உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்