"போக்குவரத்து துறை மேம்படுத்தப்படும்" - அமைச்சர் ராஜகண்ணப்பன்

2 மாதங்களில் போக்குவரத்து துறை மேம்படுத்தப்பட்டு சிறப்பாக செயலாற்றும் என போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் சட்ட பேரவையில் தெரிவித்துள்ளார்.

Update: 2021-09-09 02:38 GMT
கடந்த ஆட்சியில் 14 ஆயிரம் பேருந்துகள் கொரோனா காலத்திற்கு முன்பாக இயக்கப்பட்டதாவும், தற்போது 17 ஆயிரத்து 333 பேருந்துகள் இயங்கி வருவாதவும் அவர் குறிப்பிட்டார். 

போக்குவரத்து கழகங்கள் நஷ்டத்தில்   இயங்கி வருவதாகவும் ஒரு வருடத்தில் மட்டும் 7ஆயிரத்து 984 கோடி ரூபாய் போக்குவரத்து கழகங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தில் போக்குவரத்து துறைக்கு 9ஆயிரத்து 230 மனுக்கள் பெறப்பட்டுள்ளதாகவும், இதில், 8ஆயிரத்து 950 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார். 

மேலும், கடந்த ஆட்சியில் ஒரு பேருந்து சுத்தம் செய்வதற்கு  68 ரூபாய் செலவிடப்பட்டதால் அரசுக்கு 13 கோடி நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்த அமைச்சர்,

தற்போது  ஒரு பேருந்து சுத்தம் செய்ய  33 ரூபாய்  மட்டுமே செலவு செய்யப்படுவதாகவும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்