"ஆன்லைன் ரம்மி - தடை சட்டம் வருவது உறுதி" - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தகவல்
நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத்தொடரில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை சட்டம் கொண்டு வரப்படும் என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அமைச்சர் ரகுபதி, நடைபெற உள்ள சட்டமன்ற கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் தாக்கல் செய்ய வேண்டுமென முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேர் விடுதலையில் குடியரசு தலைவரின் முடிவை பொறுத்து தமிழக அரசு அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என்றார்.