மின்சாரம் தாக்கி 3 பேர் உயிரிழப்பு
மின்சாரம் தாக்கிய 3 வயது சிறுமியை காப்பாற்ற முயன்றபோது, அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின்சாரம் தாக்கிய 3 வயது சிறுமியை காப்பாற்ற முயன்றபோது, அடுத்தடுத்து 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம் சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரில், இந்திரா, அவரது மகள் மகாலட்சுமி, 3வயது சிறுமி அவந்தனா உள்ளிட்டோர் வசித்து வந்தனர். இதனிடையே, கன மழை பெய்ததில், மின்கசிவு ஏற்பட்டுள்ளது. வெளியில் இருந்த மின்கம்பியில் மின்கசிவு ஏற்பட்ட நிலையில், காலையில் தூங்கி எழுந்த சிறுமி அதைப் பிடித்துள்ளார். அவர் மீது மின்சாரம் பாய்ந்த நிலையில், சிறுமியை காப்பாற்ற முயன்று வெறும் கைகளால் அவரது பாட்டி இந்திரா தூக்கியுள்ளார். அவர் மீதும் மின்சாரம் பாய்ந்த நிலையில், இந்திரா அலறி துடித்துள்ளார். இதைக் கேட்ட சிறுமியின் தாய் மகாலட்சுமியும், அவர்களை காப்பாற்ற முயன்றுள்ளார். இதில், அடுத்தடுத்து சங்கிலி போல் அனைவரையும் இழுத்த நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குடும்பத்தினர் மற்றும் அப்பகுதியினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மின்கசிவு காரணம் குறித்து விசாரிக்கவும் அவர்கள் கோரியுள்ளனர்.