குட்டியுடன் கிணற்றில் விழுந்த கரடி - மீட்பு பணி தீவிரம்

உசிலம்பட்டி அருகே நாவல் பழத்தை உண்ண மலையிலிருந்து கீழே வந்த தாய் மற்றும் குட்டி கரடி அருகில் உள்ள 30அடி கிணற்றில் தவறி விழுந்தது.

Update: 2021-08-06 03:28 GMT
உசிலம்பட்டி அருகே நாவல் பழத்தை உண்ண மலையிலிருந்து கீழே வந்த தாய் மற்றும் குட்டி கரடி அருகில் உள்ள 30அடி கிணற்றில் தவறி விழுந்தது. அதை மீட்பதற்காக, வனத்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர், மரங்களை வெட்டி கிணற்றில் போட்டு அதன் மூலம் கரடி வெளியே ஏறி வருவதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். 12 மணி நேரமாக போராடியும் இந்த முயற்சி பலன் தரவில்லை. இரவில் கிணற்றிலிருந்து கரடி மேலே ஏறி வராத நிலையில் அடுத்தகட்ட முயற்சிகளை எடுக்கவுள்ளதாக தீயணைப்புத்துறை மற்றும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்