ஆராய்ச்சி நிலையத்தில் இறால் உற்பத்தி - கடலில் விடப்பட்ட 5 லட்சம் இறால் குஞ்சுகள்
கடலில் இறால் வளத்தை பெருக்குவதற்காக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 லட்சம் இறால் குஞ்சுகளை கடலில் விட்டுள்ளனர்.
கடலில் இறால் வளத்தை பெருக்குவதற்காக ராமேஸ்வரம் மீனவர்கள் 5 லட்சம் இறால் குஞ்சுகளை கடலில் விட்டுள்ளனர்.மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதிகளில் மீன்வளம் குறைந்து வருவதாக பல ஆய்வுகள் கூறும் நிலையில்,மீன்வளத்தை பெருக்குவது எப்படி என்பது குறித்து ஆய்வு நடத்தி வரும் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையம், கோபியா, பாறை, இறால் போன்ற மீன் வகைகளை உற்பத்தி செய்து கடலில் விடும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக மண்டபம் முனைக்காடு பகுதியில் இயங்கும் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலையத்தில் 5 லட்சம் ப்ளவர் இறால் குஞ்சுகள் உற்பத்தி செய்யப்பட்டு, தலைமை ஆராய்ச்சியாளர் ஜெயக்குமார் முன்னிலையில் கடலில் விடப்பட்டது. 2017ம் ஆண்டிலிருந்து இதுவரை ஒரு கோடியே 37 லட்சத்து 45 ஆயிரம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் மட்டும் 16 லட்சம் இறால் குஞ்சுகள் கடலில் விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நடவடிக்கை மூலம் கடலில் இறால் வளம் பெருகுவதோடு, மீனவர்களின் வாழ்வாதாரமும் மேம்படும் என மத்திய கடல் மீன் ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.இந்த இறால் குஞ்சுகள் 5 மாதங்களில் உரிய வளர்ச்சி பெறும் எனவும், இதன்மூலம் மீனவர்கள் பயன்பெறுவர் என ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.