"அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை ஏற்கிறோம்" - பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி
அதிமுக முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை பாஜக ஏற்றுக்கொண்டிருப்பதாக அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் விபி துரைசாமி தெரிவித்துள்ளார்.
சென்னை தியாகராயநகரில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக துணைத் தலைவர் விபி துரைசாமி, கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே பஞ்சாயத் தலைவர் தலித் பெண்ணை தரையில் அமரவைத்த நிகழ்வுக்கு கடும் கண்டனங்களை தெரிவிப்பதாக கூறினார். பேரிடர் நிதியை தணிக்கை செய்ய முடியாது என தெரிந்தும், கொரோனா மருந்து கொள்முதலில் வெள்ளைஅறிக்கையை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டிருப்பது வேடிக்கையாக உள்ளதாக அவர் விமர்சித்தார். வேளாண் சட்டத்தில் எந்த பிரிவு விவசாயிகளுக்கு எதிராக உள்ளது என ஸ்டாலின், தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரியால் சொல்ல முடியுமா என்று கேள்வி எழுப்பிய வி.பி.துரைசாமி, மக்கள் மத்தியில் அவர்கள் பொய் பிரச்சாரம் செய்து வருவதாக குற்றம் சாட்டினார். வரும் தேர்தலில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றும் அவர் கூறினார்.