இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட திடீர் மோதல் - சமாதானம் செய்ய சென்ற போலீசின் மண்டை உடை

கும்பகோணம் அருகே இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலின் போது சமாதானம் செய்ய சென்ற தலைமை காவலரின் மண்டை உடைக்கப்பட்டது.

Update: 2020-06-22 11:15 GMT
கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரம் காவல்  நிலையத்தில் தலைமை காவலராக இருப்பவர் ஐயப்பன். நேற்றிரவு இந்த சரகத்துக்கு உட்பட்ட மாத்தி கிராமத்தில் திடீரென இரு தரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இரு தரப்பும் கற்களால் தாக்கிக் கொள்வதாக தகவல் கிடைத்ததன்  பேரில் ஐயப்பன் சம்பவ இடத்திற்கு சென்றார். அப்போது மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் ஐயப்பன் ஈடுபட்ட போது அவரின் தலையில் கல் பட்டு மண்டை உடைந்தது. ரத்தம் கொட்டிய நிலையில் பலத்த காயத்துடன் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

மேலும் செய்திகள்