முதுநிலை மருத்துவ படிப்பில் 50 சதவீத இட ஒதுக்கீடு - பாஜக தலைவர் நட்டாவுக்கு நன்றி தெரிவித்த மு.க.ஸ்டாலின்

சமூகநீதிக் கொள்கையில் பாஜக உறுதியாக இருப்பதாக கூறுவது உண்மையெனில், நடந்து முடிந்துள்ள முதுநிலை மருத்துவப் படிப்பிற்கான சேர்க்கையை ரத்து செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

Update: 2020-06-14 01:48 GMT
முதுநிலை மருத்துவ படிப்பில் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு உரிமையை செயல்படுத்த வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தி வரும் நிலையில், மத்திய அமைச்சர்  ராம்விலாஸ் பாஸ்வான், பாஜக தலைவர் நட்டா ஆகியோர் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்த நிலையில், நட்டாவுக்கு நன்றி கூறியுள்ள ஸ்டாலின், இடஒதுக்கீடு கொள்கையில் உறுதியாக இருப்பது உண்மையெனில், முதுநிலை மருத்துவ படிப்பு மற்றும் இளநிலை படிப்பிற்கான இடங்களில் 50% இடஒதுக்கீட்டை  செயல்படுத்த பிரதமர் உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்