வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்கள் - விமானங்களின் பட்டியலை வெளியிட்டது மத்திய அரசு
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்டு அழைத்து வரும் பயணிகளுக்கான விமானங்களின் பட்டியலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
வெளி நாடுகளில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை இந்தியா மீட்டு கொண்டு வரும் பணி மே 7ம் தேதி முதல் துவங்கும் என மத்திய அரசு தெரிவித்திருந்தது.
* இந்நிலையில் பல்வேறு நாடுகளில் இருந்து இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கு அழைத்து வரப்படும் பயணிகளுக்கான விமானங்களின் பட்டியலை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
* அதன்படி கேரளா,தமிழ்நாடு, மகாராஷ்டிரா, டெல்லி, தெலுங்கானா, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 10 மாநிலங்களில் இருந்து கத்தார், பஹ்ரைன், அபுதாபி, சிங்கப்பூர், இங்கிலாந்து, மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கு புறப்பட்டு அங்கிருந்து இந்தியர்களை ஏற்றிக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களுக்கும் வந்தடைகிறது.
* தமிழகத்திலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு 2 விமானமும், மலேசியா மற்றும் அமெரிக்காவிற்கு தலா ஒரு விமானம், குவைத் மற்றும் சிங்கப்பூருக்கு தலா ஒரு விமானமும், ஐந்தாவது நாள் மீண்டும் சிங்கப்பூருக்கு ஒரு விமானமும், ஆறாம் நாள் ஓமன் மற்றும் இங்கிலாந்துக்கு ஒரு விமானம் ஏழாம் நாள் பங்களாதேஷ் மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளுக்கு தலா ஒரு விமானம் என தமிழகத்திலிருந்து மேற்கண்ட நாடுகளுக்கு மொத்தம் 11 விமானங்கள் இயக்கப்பட உள்ளன.
* ஒவ்வொரு விமானமும் தலா 200 முதல் 250 நபர்களை கொண்ட இந்தியர்களை இந்தியா அழைத்து வர உள்ளது.
* பல்வேறு நாடுகளிலிருந்து மொத்தம் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர்.