மார்த்தாண்டம் : சாலைகளில் சுற்றித் திரிவோருக்கு நூதன தண்டனை
கன்னியாகுமரியில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிவோருக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர்.
கன்னியாகுமரியில் ஊரடங்கு உத்தரவை மீறி சாலைகளில் சுற்றித் திரிவோருக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கினர். சாலைகளில் சுற்றுவோருக்கு மாவட்ட காவல்துறை சார்பில் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு தேர்வு நடத்தப்பட்டது. இதில் தவறான பதில் எழுதியோருக்கு கணக்குக்கு ஏற்றார் போல தோப்புக்கரணம் போட வைத்த போலீசார், அவர்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் கொரோனா உறுதிமொழி எடுக்கும் தண்டனையும் வழங்கப்பட்டது.