தொடர் விடுமுறை எதிரொலி - சனீஸ்வரன் கோவிலில் குவிந்தனர் பக்தர்கள்
தொடர் விடுமுறை காரணமாக காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
தொடர் விடுமுறை காரணமாக காரைக்கால் அருகே உள்ள திருநள்ளாறு சனீஸ்வரன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதனால் நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்து சுவாமியை தரிசிக்கும் நிலை பக்தர்களுக்கு ஏற்பட்டது. அதேபோல் நளன் தீர்த்த குளத்தில் புனித நீராடுவதற்காக நூற்றுகணக்கானோர் குவிந்ததால் அங்கும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.