தாமிரபரணியில் குளிக்க சென்றவரை காட்டுக்குள் சுத்துப்போட்ட கும்பல்.. குலைநடுங்கி போட்ட சத்தம்
தாமிரபரணியில் குளிக்க சென்றவரை காட்டுக்குள் சுத்துப்போட்ட கும்பல்.. குலைநடுங்கி போட்ட சத்தம்
நெல்லை தாமிரபரணி ஆற்றில் குளிக்க வந்த வாலிபரை தாக்கி பணம், செல்போன் பறிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி விடுமுறையொட்டி நெல்லை சுத்தமல்லியை சேர்ந்த முத்துக்குமார், கொக்கிரகுளம் பகுதியில் தாமிரபரணி ஆற்றுக்கு குளிக்க வந்துள்ளார். அப்போது 4 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக தாக்கியதோடு, அவரிடம் இருந்த பணம், செல்போன் மற்றும் வங்கி ஏடிஎம் அட்டைகளை பறித்தது. சம்பவத்தை பார்த்த பொதுமக்கள் ஆற்று பாலத்தில் கூடவும், வழிப்பறி கும்பல் முத்துக்குமாரை விட்டுவிட்டு அங்கிருந்து சிந்துபூந்துறை நோக்கி ஓடிவிட்டது. இது குறித்து தகவல் அறிந்த பாளையங்கோட்டை மற்றும் நெல்லை சந்திப்பு போலீசார், சம்பவ பகுதிக்கு வந்து காயம் அடைந்த வாலிபரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து வழிப்பறி கும்பலை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் நெல்லையில் பரபரப்பு ஏற்படுத்தியது.