பெரியகோவிலில் பிப்.5ஆம் தேதி கும்பாபிஷேகம் - கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரம்

தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி கும்பாபிஷேம் நடைபெற உள்ள கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2020-01-18 09:39 GMT
தஞ்சை பெரிய கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி கும்பாபிஷேம் நடைபெற உள்ள கோபுர கலசங்களை சுத்தப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 1996ஆம் ஆண்டுக்கு பின்னர், 23 ஆண்டுகள் கழித்து, அடுத்த மாதம் இங்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையொட்டி கோவிலில் தொல்லியல்துறை, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல்வேறு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சிதிலமடைந்த சிற்பங்கள் சீரமைக்கப்பட்டு, ரசாயன கலவை மூலம் சுத்தப்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும் கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணியும், சந்திரகாந்த கல்லை கொண்டு சுத்தப்படுத்தும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 




Tags:    

மேலும் செய்திகள்