வாக்குப்பெட்டிகள் இருந்த வாகனத்தில் மர்ம நபர்கள் : வாக்கு மாற்றப்பட்டதா என சந்தேகம்

திருவாரூரில் வாக்குப்பெட்டிகள் எடுத்து செல்லப்பட்ட வாகனத்தில் மர்ம நபர்கள் ஏறி வந்ததாக கூறி, வாகனத்தை சிறை பிடித்த மக்கள், போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2019-12-31 04:59 GMT
திருவாரூரில் 2ஆம் கட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், வாக்குப்பெட்டிகள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்து செல்லப்பட்டன. 

பெரும்புகலூர் வாக்குப்பதிவு மையத்தில் இருந்து, காவல்துறை, தேர்தல் அலுவலருடன், வாக்குப்பெட்டிகள் அடங்கிய வாகனம், நீலக்குடி கிராமத்திற்கு புதர் மண்டிய ஒரு குறுகிய சாலை வழியாக வந்துள்ளது. 

இந்நிலையில், ஆளும் கட்சியின் வேட்பாளர்களின் ஆதரவாளர்கள் வாகனத்தில் வந்ததாகவும், வாக்கு எண்ணும் மையங்களுக்கு அருகில் வந்ததும் இறங்கி ஓடியதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து, 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாகனத்தை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். 

ஓட்டுப்பெட்டி மாற்றப்பட்டதா என்ற சந்தேகம் எழுவதாகவும், பாதுகாப்பாக வரவேண்டிய ஓட்டுப்பெட்டி வாகனத்தில் சம்பந்தமில்லாத நபர்களை எப்படி ஏற்றி வந்தீர்கள் என்று மக்கள் கேள்வி எழுப்பினர். போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்தே, போராட்டம் கைவிடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்