நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரம் :
நாங்குநேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில், தங்களது சொத்து விவரங்களை தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 96 கோடியே 36 லட்சம் ரூபாய் சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடத்தில் அ.தி.மு.க. வேட்பாளர் நாராயணன் ஒரு கோடியே 28 லட்சத்து ரூபாய் சொத்து மதிப்புடனும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் 32 லட்சம் ரூபாய் சொத்து மதிப்புடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
காங்கிரஸ் வேட்பாளர் சொத்து மதிப்பு:
அசையும் சொத்து - ரூ.23,11,98,065,
அசையா சொத்து - ரூ.18,64,23,245,
குடும்ப உறுப்பினர் சொத்து - ரூ.49,60,09,322,
மொத்த சொத்து - ரூ.91,36,30,632
அ.தி.மு.க.வேட்பாளர் சொத்து மதிப்பு:
அசையும் சொத்து - ரூ.10,09,680,
அசையா சொத்து - ரூ. 86,95,00,
குடும்ப உறுப்பினர் சொத்து - ரூ.31,68,000,
மொத்த சொத்து - ரூ.1,28,72,680
நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சொத்து மதிப்பு :
அசையும் சொத்து - ரூ. 2,26,503,
அசையா சொத்து - ரூ. 22,00,000,
குடும்ப உறுப்பினர் சொத்து - ரூ.8,10,870,
மொத்த சொத்து - ரூ.32,37,373