அரசியல் களத்தை திரும்பி பார்க்க வைத்த அண்ணாமலை போட்ட ட்வீட் | Annamalai | BJP | Tamilnadu
ஆண்டுதோறும் பருவமழைக் காலத்தில், டெல்டா பகுதியில், சம்பா பயிர்கள், மழை வெள்ளத்தால் பாதிக்கப்படுவது தொடர்கதை ஆகியிருப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு, ஏக்கருக்கு 40 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை வழங்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், தமிழகம் முழுவதும் உள்ள பாசனக் கால்வாய்களை, முழுமையாகத் தூர்வாரும் பணிகளைப், போர்க்கால அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும் என்றும் திமுக அரசை அவர் வலியுறுத்தியுள்ளார்.