தமிழகத்தில் தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறைவு - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
தமிழகத்தில் தான் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் குறைவாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் தான் டெங்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்கள் விகிதம் குறைவாக உள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். மகப்பேறு மற்றும் குழந்தைகள் இறப்பு விகிதத்தை குறைக்கும் வகையில், சிங்கப்பூர் சுகாதார அதிகாரிகளுடன், சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், டெங்கு காய்சாலால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட தற்போது மூன்று மடங்கு குறைந்து உள்ளதாக தெரிவித்தார். சிங்கப்பூரை விட தமிழகத்தில் டெங்கு பாதிக்கப்பட்டவர்களின் விகிதம் குறைவாக உள்ளதாக அந்நாட்டு மருத்துவ குழுவினர் வியந்து கூறுவதாக அமைச்சர் தெரிவித்தார். நீட் தேர்வு விவாகத்தில் தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேர்மையான முறையில் விசாரணை நடத்தி உரிய முறையில் நடவடிக்கை எடுத்து வருகின்றனர் என தெரிவித்தார்.