"நீதிபதிகள் சிவஞானம், பவானி அமர்விலேயே விசாரியுங்கள்" - வேதாந்தா குழுமம், அரசு துறைகள் கோரிக்கை

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகளை நீதிபதிகள் சிவஞானம், பவானி சுப்பராயன் அமர்விலேயே பட்டியலிடும்படி வேதாந்தா குழுமம், அரசு துறைகள், உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்ற பதிவுத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளன.

Update: 2019-09-28 02:33 GMT
ஸ்டெர்லைட் ஆலை தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், வி.பவானி சுப்பராயன் அமர்வில் கடந்த 28 நாட்கள் விசாரிக்கப்பட்டது. இதனிடையே சுழற்சி முறை மாற்றம் அடிப்படையில் நீதிபதி சிவஞானம் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டார். வாதங்கள் முடிவடைந்து தீர்ப்பு தள்ளிவைக்க இருந்த நிலையில்,  வழக்கை வேறு நீதிபதிகள் அமர்வில் பட்டியலிட்டதால் வழக்கறிஞர்கள் அதிர்ச்சியடைந்தனர்.இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த அமர்விலேயே பட்டியலிடும்படி உயர் நீதிமன்றத்திடம் கோரிக்கை வைக்க வேதாந்தா குழுமம் மனு ஒன்றை தயார் செய்துள்ளது. இதற்கு அரசு தரப்பிலும், ஆட்சேபனை மனுதாரர்கள் தரப்பிலும் சம்மதம் பெற்றுள்ளது.மூவர் தரப்பிலும் கையெழுத்திடப்பட்டுள்ள கடிதம் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்