நீட் ஆள்மாறாட்ட விவகாரம் : மேலும் 3 மாணவர்களிடம் விசாரணை

நீட் ஆள்மாறாட்ட விவகாரத்தில் மேலும் 3 மாணவர்களை சிபிசிஐடி போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2019-09-28 02:25 GMT
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் நீட் தேர்வு எழுதி சேர்ந்துள்ள அபிராமி, பிரவீன், ராகுல் ஆகிய 3 மாணவர்களையும் அவர்களின் தந்தையும் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே பிடிபட்ட உதித் சூர்யா மற்றும் அவரது தந்தையிடம் நடத்திய விசாரணையில் இவர்கள் 3 பேரும் ஆள்மாறாட்டம் செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் இவர்களை பிடித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்த மூன்று மாணவர்களும் உதித் சூர்யாவுடன் ஒன்றாக படித்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.போலீசார் விசாரணையில் குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டால் 3 மாணவர்கள் உட்பட அனைவரும் கைது செய்யப்படலாம் என சி.பி.சி.ஐ.டி போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்